சிம்புதேவன் படத்தில் விஜயலட்சுமி

வெங்கட்பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் மகளான இவர், அதன்பிறகு பல படங்களில் நடித்தார். வெண்ணிலா வீடு படத்திற்கு பிறகு திருமணம் செய்து கொண்டார். வெங்கட்பிரபு இயக்கிய சென்னை -28 படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்தார்.

இந்தநிலையில், பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜயலட்சுமி, தற்போது வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த தகவலை தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார் விஜயலட்சுமி.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here