முடிவில்லையேல் வரவு செலவு திட்டம் தோற்கடிப்போம்: மாவையின் வாக்குறுதியைடுத்து அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் முடிவிற்கு வந்தது!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளனர். மாவை சேனாதிராசா நேரில் சென்று வழங்கிய வாக்குறுதியையடுத்தே அரசியல்கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து நடைபயணமாக சென்ற யாழ் பல்கலைகழக மாணவர்கள், கிழக்கு பல்கலைகழக மாணவர்கள், யாழில் நேற்று கூடிய சிவில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு இன்று அநுராதபுரத்திற்கு நேரில் சென்று அரசியல்கைதிகளை சந்தித்தனர்.

இந்த பிரதிநிதிகள் குழு அநுராதபுரத்திற்கு செல்வதற்கு சற்று முன்னதாக, தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அநுராதபுரத்திற்கு சென்று அரசியல்கைதிகளை சந்தித்தார். உண்ணாவிரத போராட்டத்தை கைவிடும்படியும், வரும் 17ம் திகதிக்குள் அரசியல்கைதிகளிற்கு தீர்வொன்றை தராவிட்டால் வரவு செலவு திட்டத்தை தோற்கடிப்போம் என்றும் மாவை சேனாதிராசா வாக்குறுதி வழங்கினார்.

இதையடுத்து அரசியல்கைதிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

அரசியல்கைதிகளை சந்தித்ததன் பின்னர், மாவை சேனாதிராசா திரும்பி வரும் வழியில் பல்கலைகழக மாணவர்களின் நடைபவனியை எதிர்கொண்டார். எனினும், உண்ணாவிரதிகளின் முடிவு தொடர்பில் அவர எந்த தகவலையும் வழங்காமல் சென்றிருந்தார் என பல்கலைகழக மாணவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நடைபயணம் மேற்கொண்ட பல்கலைகழக மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஸ்ணமீனன் கருத்து தெரிவித்த போது-

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here