இந்து மதத்தை பின்பற்றுகிறேன்: விஜய் தந்தை

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கரம் விழாவில் நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டு, புனித நீராடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு? மக்களால் உயர்த்தி விடப்பட்டவர் மக்களுக்காக பணியாற்ற வருகிறார். என்னை ஆன்மீகத்தில் ஈடுபட வைத்தவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தான். பிறப்பால் கிறிஸ்துவனாக இருந்தாலும் இந்தியாவில் பிறந்ததால் இந்து மதத்தை பின்பற்றுகிறேன் என்றார்.

கடந்தாண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பதி கோவிலில் காணிக்கை செலுத்துவது கடவுளுக்கு கொடுக்கும் லஞ்சம் என கூறினார். இது இந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவதாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சில தினங்களுக்கு முன்னர் எஸ்.ஏ.சந்திரசேகர், முன்ஜாமின் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here