சிம்புவுடன் இரகசிய கல்யாணம்… முதலமைச்சராகுவதற்காக பிரிந்தாரா நயன்தாரா?: புது சர்ச்சை!

முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் திருமணம் நடந்தும் நயன்தாரா, சிம்புவை விட்டுப்பிரிந்து விட்டார் என சிம்புவின் நண்பரும் கெட்டவன் பட இயக்குநருமான இயக்குநர் ஜி.டி.நந்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்புவும், நயன்தாராவும் காதலித்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இது குறித்து இன்று வரை தெளிவான தகவல் வெளிவராத நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இயக்குநர் ஜி.டி.நந்து,’ சிம்புவுக்கும், நயன்தாராவிற்கும் திருமணம் நடந்துவிட்டது. அதை நேரில் பார்த்த சாட்சி நான் தான்’ என்று கூறியுள்ளார்.

‘அவங்க கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாத்திக்கிட்டாங்க. அதுக்கு அப்புறம் அவங்க பிரிஞ்சதுக்கு பலரும் பல காரணங்கள் சொல்றாங்க. ஆனால், உண்மையான காரணம், திருவல்லிக்கேணியில பிள்ளையார் கோயில் தெருவில் ஒரு ஜோசியர் இருக்கார். அவர்கிட்ட நானும், சிம்புவோட இன்னொரு நண்பரும் போய் ஜாதகம் பார்த்தோம். இவங்க ரெண்டு பேருக்குள்ளேயும், பிரச்னைகள் வந்துகிட்டு இருக்கே ஒற்றுமையா இருப்பாங்களா’னு கேட்டோம்.

அதுக்கு அவர், இந்தப் பையனுக்கு தனியா வாழ்க்கை இருக்கு. அந்தப்பொண்ணுக்கு தனி வாழ்க்கை இருக்கு. ரெண்டுபேரும் சேர்ந்து வாழ்ந்தால் அந்தப்பொண்ணு தெருவுக்கு வந்துடும். நயன்தாரா கல்யாணம் ஆகாமல் இருந்தால், கண்டிப்பாக முதலமைச்சர் ஆகிவிடுவார். அது நிச்சயம். கல்யாணமாகிட்டா அவரோட வாழ்க்கை கேள்விக்குறி. சிம்புவை மட்டுமல்ல, யாரைக் கல்யாணம் பண்ணினாலும் அவங்க வாழ்க்கை கேள்விக்குறிதான்.நடுரோட்டுக்கு வந்துடுவார்னு சொல்லிட்டாரு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘நயன்தாரா ஜோசியத்தில் அலாதியான நம்பிக்கை கொண்டவர். அதனால்தான், நயன்தாரா, சிம்புவை பிரிந்து விட்டார். சிம்புவும், நம்மால் ஒரு பெண் தெருவுக்கு வரவேண்டாமே’ என நினைத்து நயன்தாராவை பிரிந்திருக்கலாம்’ என்று கூறி இயக்குநர் ஜி.டி.நந்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here