மலிங்கவை உசுப்பேற்றியதா #me too?: இங்கிலாந்தின் முதுகெலும்பை உடைத்தார்!

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க மீது நேற்று முன்தினம் மும்பையை சேர்ந்த இளம் யுவதியொருவர் பாலியல் புகார் கூறியிருந்தார். அதை சின்மயி பகிர்ந்திருந்தார்.

பாலியல் புகாரில் சிக்கியுள்ள நிலையில், இன்று நடைபெறும் இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார் லசித் மலிங்க.

பத்து ஓவர்களில் ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 44 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஜோசன் ரோய், மோர்கன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ்,டௌவ்சன் ஆகியோரவது விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 278 ஓட்டங்களை பெற்றது. அந்த அணியின் மோர்கன் 92 ஓட்டங்களையுமு், ரூட் 71 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மலிங்க தவிர வேறு யாரும் பிரகாசிக்கவில்லை. இன்னொரு பந்துவீச்சாளர் ஜொலித்திருந்தால் நிச்சயம் இங்கிலாந்தை குறைந்த ஓட்டங்களுடன் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

தற்போது துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை, வழக்கம் போல முதலாவது விக்கெட்டை விரைவில் இழந்தது. 2 ஓவர் முடிவில் உபுல் தரங்கவின் டக் அவுட்டுன் 12 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here