மகளின் காதலனின் கால்களை வெட்டிய சீமானின் தளபதி!

நாகர்கோவில் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காதலன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் உசரவிளை பெருமாள்புரத்தை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் அப்பகுதியில் பெயிண்டராக உள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயபாலின் மகளும் மென்பொறியாளருமான டிக்சோனாவை காதலித்துள்ளார்.

இவர்களது காதலுக்கு டிக்சோனாவின் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்க ஸ்டாரினும், டிக்சோனாவும் கடந்த 10 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பெற்றோரால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று உணர்ந்த அவர்கள் பாதுகாப்பு கேட்டு நேற்று மாலை கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு காரில் சென்றுள்ளனர்.

காவல் நிலையம் செல்லும் வழியில் காரை வழிமறித்த டிக்சோனாவின் தந்தை ஜெயபால் மற்றும் ரௌடிகள், காதல் ஜோடி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.

தனது பெண்ணை கூட்டிக்கொண்டு ஓடிய கால்கள் இதுதானே என்று கேட்டு காதலன் ஸ்டாலினின் இரு கால்களையும் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ஸ்டாலின் ரத்தவெள்ளத்தில் விழுந்துள்ளார். காரில் இருந்த அனைவரையும் அடித்து உதைத்து விட்டு டிக்சோனாவை தங்கள் காரில் ஏற்றி அழைத்து சென்று விட்டனர். இதையடுத்து காயம் அடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறையினரிடம் ஸ்டாலினின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here