ஜமால் கசோஜியை கொன்றது சவுதியே: ஆதாரத்தை வெளியிட்டது துருக்கி!

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி சவுதியால் கொல்லப்பட்டுவிட்டார் என்று துருக்கி ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து துருக்கி அதிகாரிகள் தரப்பில், “எங்களுக்குக் கிடைத்த ஓடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி ஒக்டோபர் 2 ஆம் திகதி கொல்லப்பட்டிருக்கிறார். அவரைக் கொன்று அவரது உடலை சவுதி அதிகாரிகள் அழித்துள்ளனர். எங்களுக்குக் கிடைத்த அந்த வீடியோவில் உள்ள நபர்கள் அரபிக் பேசுவதை நீங்கள் கேட்கலாம். அவர்கள் ஜமாலைத் தாக்குகின்றனர். அவர்கள் அவரைக் கொடுமை செய்து கொலை செய்கின்றனர். இதில் நீங்கள் ஜமாலின் குரலைக் கேட்கலாம்” என்று கூறியுள்ளனர்.

சவுதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்த வந்த ஜமால் கசோஜி, ஒக்டோபர் 2 ஆம் திகதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரை காணவில்லை.

இந்த துணை தூதரகத்திற்குள் தாக்குதலும், போராட்டமும் நடைபெற்றுள்ளதை சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கசோஜியை ஆட்கள் அடிப்பதை கேட்க முடிகிறது என்று ஒருவர் கூறியதாக வோஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் வெளியிட்டுள்ள ஆதாரம் ஒன்று குறிப்பிடுகிறது. கசோஜி இந்தப் பத்திரிகையில் எழுதி வந்தது குறிப்பிடத்தக்கது.

கசோஜி கொல்லப்பட்ட தருணத்தை காட்சிப்படுத்திய காணொளி இருப்பதாக கூறப்படுகிறது என துருக்கி அரசுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் பிரபல பத்தி எழுத்தாளர் கமால் ஒஸ்டுரக் இந்த வாரத் தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்,

ஜமால் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு துருக்கி பெண் ஒருவரை திருமணம் செய்ய இருக்கிறார். விவாகரத்து தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காகத்தான் அவர் இந்த தூதரகத்துக்கு சென்றுள்ளார்.

பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருக்கும் கமராவிலிருந்து பெறப்பட்ட காணொளியை துருக்கியின் டி.ஆர்.சி உலக தொலைக்காட்சி முன்னதாக வெளியிட்டது.

கறுப்பு வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் தூதரகத்திற்கு வரும் காட்சிகள் அந்த காணொளியில் உள்ளன.

சவுதி ஆண்கள் குழு ஒன்று துருக்கிக்கு இஸ்தான்புல் விமான நிலையம் வழியாக வரும் காட்சிகள், பின் அவர்கள் விடுதிக்குள் செல்லும் காட்சிகளும், துருக்கியைவிட்டு வெளியேறும் காட்சிகளும் அந்த காணொளியில் உள்ளன.

இந்த நிலையில் துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில் கடந்த வாரம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்ற அவர் மாயமானார்.

இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலைச் செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறி வந்த நிலையில் வீடியோ மற்றும் ஓடியோ ஆதாரத்தை தற்போது வெளியிட்டுள்ளது.

ஜமால் கசோஜி காணாமல் போய்விட்டதும், அவர் கொல்லப்பட்டதாக வெளியாகும் தகவல்களும் சர்வதேச அளவில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. சவுதி அரேபியாவின் மீதான நம்பிக்கைக்கு இது பெருங்களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விர்ஜின் விண்வெளி நிறுவனங்களில் செய்கின்ற ஒரு பில்லியன் சௌதி முதலீடு பற்றிய பேச்சுவார்த்தைகளை தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் நிறுத்திவிட்டார்.

இந்த மாதத்தின் இறுதியில் நடைபெறும் சவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டில் இருந்து பல உயரிய வணிகத் தலைவர்கள் விலகியுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here