முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்!

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 58.

இவர் 1996 முதல் 2001 வரை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகராக பதவி வகித்தவர்.

2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக இருந்தவர்.

2013-ஆம் ஆண்டு தலைமையிடம் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக திமுகவில் இருந்து விலகி ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.

பின்னர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

பரிதி இளம்வழுதி, தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். எழும்பூர் தொகுதியில் 1989 முதல் 2011 வரை தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here