அச்சுவேலி மனித எலும்புக்கூடுகள்: நேரில் சென்ற நீதிவான்!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்ட இடத்திற்கு இன்று மல்லாகம் நீதிவான் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.

அச்சுவேலி பத்தமேனி சூசையப்பர் வீதியில் மின்சார கம்பம் நடுவதற்காக நேற்றையதினம் நிலத்தை தோண்டிய போது மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன. இதுபற்றி அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அத்துடன் இன்றைய தினம் மல்லாகம் நீதிவான் ஏ.ஆனந்தராஜாவும் சட்ட வைத்திய அதிகாரி மயூரதனும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

இன்றைய தினம் மேலும் தோண்டப்பட்ட போது மேலதிகமாகவும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன. கால், கை, விரல் மண்டையோடு பகுதிகள் மீட்கப்பட்டிருந்து.

இந்நிலையில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான ஆய்விகளை மேற்கொள்வதற்காக அவை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுள்ளது.

இதேவேளை, மின்சார கம்பம் நாட்டும் பணியினை தொடர்ந்து மேற்கொள்ளவும் நீதவான் அனுமதியளித்தார். மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here