பிரதம நீதியரசராக நளின் ஜெயலத் பெரேரா நியமனம்!

இலங்கையின் 46ஆவது பிரதம நீதியரசராக நளின் ஜெயலத் பெரேரா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று மாலை பதவியேற்றார்.

30 ஆண்டுகளுக்குப் பின்னர், பிரதம நீதியரசராக, பொறுப்பேற்கும் முதலாவது தொழில்சார் நீதியரசராக இவராவார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், புதிய பிரதம நீதியரசராக நளின் ஜெயலத் பெரேராவின் பெயர் ஏற்கனவே முன்மொழியப்பட்டிருந்தது. இந்த நிலையில், சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் இன்று நண்பகல் அரசியலமைப்பு சபை கூடி அவரது நியமனத்தை உறுதி செய்த்து.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்பின் பதவிக்காலம் இன்று முடிவடைந்த்து. இந்தநிலையில், 46 ஆவது பிரதம நீதியரசராக நளின் பெரேரா, இன்று (12) வெள்ளிக்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.

நீதிவானாக பணியை ஆரம்பித்து, பிரதம நீதியரசராக உயர்பதவிக்கு கடைசியாக நியமிக்கப்பட்டவர், நீதியரசர் பரிந்த ரணசிங்க ஆவார்.

அதற்குப் பின்னர், நளின் பெரேராவே, நீதிவானாக பணியை ஆரம்பித்து, பிரதம நீதியரசராக பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here