இந்தவார ராசி பலன்கள்!

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஒக்டோபர் 12 – 18) பலன்கள்.

மேஷம்
(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். செயல்களில் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். விரக்திகளும் விரயங்களும் நீங்கி வருவாய் பெருகும். குடும்பத்தில் அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். பொருளாதாரம் படிப்படியாக வளரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டாகும். இருப்பினும் உங்களது வேலைகளை நன்கு திட்டமிட்டுச் செய்யவும். வியாபாரிகள் சிறிய தடைகளுக்குப் பிறகு லாபத்தைக் காண்பார்கள். புதிய கடைகளைத் திறக்கும் முடிவைத் தள்ளி வைக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் குறையும். புதிய பயிர்களை உற்பத்தி செய்ய வேண்டாம்.

அரசியல்வாதிகளுக்கு இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உடல்சோர்வைப் பொருட்படுத்தாமல் கட்சிப் பணிகளில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவமணிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். விளையாடும்போது கவனத்துடன் இருக்கவும்.

பரிகாரம்: நந்தீஸ்வரருக்கு கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்யவும்.
அனுகூலமான தினங்கள்: 15,16.
சந்திராஷ்டமம்: 12, 13, 14.

ரிஷபம்
(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

உங்களின் புத்திசாலித்தனம் பளிச்சிடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிறருக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். பூர்வீகச் சொத்து பிரச்னைகளில் சில எதிர்ப்புகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகங்களில் மதிப்பும் மரியாதையும் கூடும். எந்நேரமும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வியாபாரிகள் கொஞ்சம் விட்டுக்கொடுத்து அனுசரணையாக நடந்துகொண்டால் கூட்டாளிகளுடன் உள்ள விரிசல்கள் விலகி சுமுகமாக வியாபாரம் செழிப்படையும். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். கால்நடைகளை கவனத்துடன் பராமரிக்கவும்.

அரசியல்வாதிகள் எல்லாச் செயல்களிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். கலைஞர்களுக்கு இது ஒரு சிறப்பான காலகட்டமாகும். அதிக வாய்ப்புகள் உங்கள் வாயிற்கதவைத் தட்டும்.

பெண்மணிகளுக்கு இல்லத்தில் நிலவும் சந்தோஷத்தால் உங்களுக்கும் மனநிம்மதி ஏற்படும். மாணவமணிகள் கவனமாக படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.

பரிகாரம்: பார்வதி பரமேஸ்வரரை வணங்கி வரவும்.
அனுகூலமான தினங்கள்: 12,13.
சந்திராஷ்டமம்: 15, 16.

மிதுனம்
(மிருகசீரிஷம்3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குதூகலமான வாரமிது. நினைத்த காரியங்கள் நிறைவேறும். மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தோர் வகையில் மனக்கசப்புகள் வரலாம். மகிழ்ச்சிகரமான செய்தி வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை கருத்துடன் செய்வார்கள். இருப்பினும் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வியாபாரிகள் புதிய தொழில்களில் அனுபவம் பெறுவார்கள்.

கூட்டாளிகளிடம் எச்சரிக்கை தேவை. விவசாயிகளுக்கு செலவுகள் அதிகமாகி வரவுகள் குறையும். கால்நடைகளுக்கும் செலவு செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பார்வையில் படாமல் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். எதிரிகளின் மிரட்டல்களுக்கு அடிப்பணிய வேண்டாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் செய்வதில் தடைகள் உண்டாகலாம். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். மாணவமணிகளுக்கு பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

பரிகாரம்: நவக்கிரகத்தில் சனிபகவானுக்கு எள் தீபமேற்றி வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 12,14.
சந்திராஷ்டமம்: 17, 18.

கடகம்
(புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பொருளாதாரம் சீராகவே இருக்கும். உங்களின் எல்லா செயல்களும் நேர்த்தியாகவே முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். நீங்கள் எதிர்பார்த்து காத்து இருந்த உதவிகள் தேடிவரும் சரியான காலகட்டமிது. நன்மைகள் பல உங்களை நாடி வரும்.

உத்தியோகஸ்தர்கள் சிறப்பாக பணியாற்றுவார்கள். எதிர்பாராத பதவி உயர்வும் உங்களைத் தேடிவரும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப விற்பனைகளை கையாளவும். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள். மகசூல் அதிகரித்து நல்ல லாபம் காண்பீர்கள். பாசன வசதிகளை அதிகரித்துக் கொள்ளவும்.

அரசியல்வாதிகள் மக்கள் சேவையில் நல்ல வரவேற்புப் பெறுவார்கள். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். கலைத்துறையினர் சக கலைஞர்களுக்கு உதவிகள் செய்வார்கள்.

பெண்மணிகள் உடல்நலத்தில் அக்கறை மேற்கொள்ளவும். உறவினர்களிடம் மனக்கசப்பு இன்றி சுமுகமாகப் பழகவும். மாணவமணிகள் நீண்டகாலத் திட்டங்களைத் தீட்ட இது உகந்த நேரம்.

பரிகாரம்: ஸ்ரீ ராம் ஜெய்ராம் என்று ஜபித்துக் கொண்டே சுற்றி வரவும்.
அனுகூலமான தினங்கள்: 13, 14.
சந்திராஷ்டமம்: இல்லை.

சிம்மம்
(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

எந்தக் காரியத்தையும் ஆழமாகச் சிந்தித்துச் செயல்படுத்துவீர்கள். நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்த வழக்குகள் சாதகமாக முடியும். தந்தை வழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து மன அமைதியைக் காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். எவரையும் நம்பி வியாபார விஷயங்களைப் பேச வேண்டாம். விவசாயிகளுக்கு செலவுகள் அதிகமாகி வரவுகள் குறையும். கால்நடைகளுக்குச் செலவு செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பார்வையில் படாமல் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களைச் செய்வதில் தடைகள் உண்டாகலாம். செயற்கரிய காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.

பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். மாணவமணிகள் படிப்பை மிகவும் கவனத்துடன் படித்தால்தான் நினைத்தவாறு மதிப்பெண்கள் பெறமுடியும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் பெருமாள்} தாயாரை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 13,15.
சந்திராஷ்டமம்: இல்லை.

கன்னி
(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகளில் எந்தவிதக் கவலையுமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். உடல்நலத்திற்காக சிறிது மருத்துவச் செலவுகளையும் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். சக ஊழியர்கள் உங்களோடு நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகள் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். வீண் செலவுகளையும் தவிர்ப்பது நல்லது. விவசாயிகள் சந்தையில் போட்டிக்கு ஏற்றவாறு பொருள்களை விற்பனை செய்வார்கள். அரசு மானியங்களையும் பெறுவார்கள்.

அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலகட்டமிது. மேலிடத்தின் உத்தரவை நிறைவேற்ற முனைப்புடன் செயல்படுவீர்கள். கலைத்துறையினருக்கு ஆற்றல் அதிகரிக்கும். ஒப்பந்தங்கள் கைகூடும்.

பெண்மணிகள் புதிய ஆடை அணிகலன்களை வாங்கும் ஆசையை குறைத்துக்கொள்ள நேரிடும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: காஞ்சி காமாட்சியம்மனை தரிசித்து அருள் பெறவும்.
அனுகூலமான தினங்கள்: 14,17.
சந்திராஷ்டமம்: இல்லை.

துலாம்
(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உங்களின் தீர்க்கமான சிந்தனைகளால் வேலைகளை எப்பாடுபட்டாவது குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்து விடுவீர்கள். ஆன்மிகச் சிந்தனைகளால் சிறப்படைவீர்கள். நெடுநாள்களாக ஒத்திவைத்திருந்த வேலைகளை எடுத்து முடித்து விடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி வேலையில் கவனம் செலுத்தவும். இந்த காலகட்டத்தில் சக ஊழியர்களிடம் உதவி எதிர்பார்க்க முடியாது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிரமங்கள் குறையும். விவசாயிகளுக்கு மகசூல் திருப்திகரமாகவே இருக்கும். எதிர்பாராத பண வரவால் பழைய கடன்களை அடைக்க நினைப்பீர்கள்.

அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். ரசிகர்களின் ஆதரவும் குறையும்.

பெண்மணிகள் கணவருடனான உறவில் ஒற்றுமையை காண்பார்கள். உறவினர்களால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. மாணவமணிகளின் கோரிக்கைகள் யாவும் நிறைவேறும்.

பரிகாரம்: சிவ தரிசனம் உகந்தது. நாகலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யவும்.
அனுகூலமான தினங்கள்: 15,17.
சந்திராஷ்டமம்: இல்லை.

விருச்சிகம்
(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

அலைச்சல்கள் இருந்தாலும் செயல்களில் உள்ள தடைகள் விலகி, முடிவு வெற்றியாக அமையும். பெயரும் புகழும் உண்டாகும். உடன்பிறந்தோர் உதவி செய்யும் நிலையில் இருப்பார்கள். பூர்வீகச் சொத்துகளில் இருந்த வில்லங்கம் அகலும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிட்டும். மேலதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். அலுவலக ரீதியான பயணங்கள் நன்மை தேடித் தரும். வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் வருகையால் விற்பனை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு நண்பர்கள் உதவி செய்வார்கள். விளைநிலத்தில் அக்கறை காட்டினால் எதிர்காலத்தில் லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். இறுக்கமான சூழ்நிலைகளில் இருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினர் புகழைத் தக்கவைத்துக் கொள்வார்கள். வாய்ப்புகள் சுமாராகவே வரும்.

பெண்மணிகள் தங்கள் சேமிப்பைச் செலவு செய்ய நேரிடும். மாணவமணிகளுக்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பு இருக்கும். படிப்பில் அதிக அக்கறை செலுத்தவும்.

பரிகாரம்: திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வருவது நல்லது.
அனுகூலமான தினங்கள்: 13,17.
சந்திராஷ்டமம்: இல்லை.

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கும். உங்கள் தனித்தன்மை வெளிப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். எதிரிகளின் பலம் குறையும். பயணங்களால் அனுகூலங்களைப் பெறுவீர்கள். வழக்குகளில் தீர்ப்பு வரத் தாமதமாகும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். பணவரவுடன் உயர் பதவிகள் தேடி வரும். வியாபாரிகள் சாதுர்யத்துடன் செயல்பட்டால் லாபத்தை அள்ளலாம். கூடவே, போட்டிகளையும் சமாளிக்கலாம். விவசாயிகள் பொறுமையை கடைப்பிடித்து விவசாயத்தைப் பெருக்குவார்கள். புதிய குத்தகைகளைத் தவிர்க்கவும்.

அரசியல்வாதிகளின் அந்தஸ்தில் சற்றுக் குறைபாடுகள் உண்டாகும். தொண்டர்களின் பாராமுகத்தால் கோபப்படாமல் செயலாற்றவும். கலைத்துறையினருக்கு புதிய படைப்புகளை உருவாக்கும் ஆர்வம்
உண்டாகும். உயர்ந்தவர்களின் சந்திப்பு உற்சாகம் கொடுக்கும். பெண்மணிகள் பெரியோர்களின் ஆசியுடன் திட்டமிட்ட வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பர். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

பரிகாரம்: செவ்வாயன்று ராகுகாலத்தில் துர்க்கையை வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 13,18.
சந்திராஷ்டமம்: இல்லை.

மகரம்
(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்கள் செயல்களில் ஏற்படும் இடையூறுகளை எதிர்த்து நின்று வெற்றி பெறுவீர்கள். கடன் வாங்க நேரிடலாம். பதற்றப்படாமல் நிதானமாகச் செயல்படவும். மற்றவர்களுக்கு வாக்குக் கொடுப்பதையோ முன்ஜாமீன் போடுவதையோ தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கூடும். வரவேண்டிய பணம் வந்து சேரும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நன்றாகவே முடியும். சிறிய முதலீடு வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். விவசாயிகளுக்கு உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். சிலர் கால்நடைகள் வாங்குவார்கள்.

அரசியல்வாதிகள் கட்சி மேலித்திடம் பொறுமையோடு நடந்துகொள்ளவும். தொண்டர்களிடம் கடுமையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை பெறுவர்.

சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்மணிகள் கணவரிடன் நேசமாகப் பழகி பிரச்னைகளைத் தீர்ப்பர். மாணவமணிகள் பெற்றோர்களின் சொல் கேட்டு நடந்தால் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை ராம் ராம் என்று ஜபித்து வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 16,18.
சந்திராஷ்டமம்: இல்லை.

கும்பம்
(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட வேலைகளில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும் முடிவு நீங்கள் எதிர்பார்த்தற்கு மேல் சிறப்பாக அமையும். புத்திசாதுர்யத்துடன் செயல்பட்டு தடைகளைத் தகர்ப்பீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பினால் உங்கள் பெருமை உயரும்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை முன்கூட்டியே செய்து முடிக்கவும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் பிரச்னை இருக்காது. வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சில சிக்கல்களைச் சந்திப்பார்கள். எனவே, கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகளின் உடல்உழைப்புக்கு இருமடங்கு லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.

அரசியல்வாதிகள் விருந்து கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

பெண்மணிகள் வீண் வாக்குவாதங்களில் சிக்கிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். பேச்சைக் குறைத்துக் கொள்வது நலம். மாணவமணிகளுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை துளசியால் அர்ச்சித்து வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 17,18.
சந்திராஷ்டமம்: இல்லை.

மீனம்
(பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதாரத்தில் குழப்பங்கள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். கவலைகள் நீங்கும். மருத்துவச் செலவுகள் சிறிது ஏற்பட்டாலும் உடல் நலத்தில் பெரிய பாதிப்புகள் இராது. சமூகத்தில் உங்கள் மதிப்பு கூடத் தொடங்கும்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்டு நன்கு செயலாற்றுவீர்கள். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் விலகும். பணவரவு நன்றாக இருக்கும். வியாபாரிகளைத் தேடி, வரவேண்டிய பணம் வந்து சேரும். கூடுதலாக உழைத்து வருமானத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளின் உடல் உழைப்பிற்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதார நிலைமை சீரடையும்.

அரசியல்வாதிகளுக்கு அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். ககலைத்துறையினர் மனதிற்கினிய ஒப்பந்தங்களைச் செய்ய நேரிடும். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்புகளில் கவனமாக இருக்கவும். மாணவமணிகள் கல்வி உயர்வுக்காகச் செய்யும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். சிலருக்கு கல்வி கற்பதற்கான இடமாற்றமும் கிடைக்கும்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 15,18.
சந்திராஷ்டமம்: இல்லை.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here