வழியெங்கும் பேராதரவு: வடமத்திய மாகாணத்திற்குள் நுழைந்தது நடைபயணம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ் பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள நடைபயணம் இன்று வடமாகாணத்தை கடந்து, வடமத்திய மாகாணத்திற்குள் நுழைந்தது.

இன்று காலை ஓமந்தையிலிருந்து நடைபயணத்தை ஆரம்பித்த பல்கலைகழக மாணவர்கள், வவுனியா நகரையடைந்த போது, பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. இதேபோல, வழியெங்கும் போராட்டத்திற்கு ஆதரவாக பலர் திரண்டிருந்தனர்.

வவுனியா ஆலயமொன்றில் வழிபாடும், ஆசீர்வாதமும் இடம்பெற்றது. மாணவர்களிற்கு ஆதரவாக வவுனியாவின் பல இடங்களில், ஏராளமானவர்கள் நடைபயணத்தில் இணைந்துமிருந்தனர்.

தொடர்ந்து நடைபயணத்தை மேற்கொண்டுள்ள மாணவர்கள், சற்று முன்னர் வவுனியாவை கடந்து மதவாச்சிக்குள்- வடமத்திய மாகாணம்- நுழைந்துள்ளனர். மதவாச்சியில் இன்றைய நான்காம் நாள் நடைபயணம் நிறைவடையவுள்ளது.

நாளை காலையில் அநுராதபுரம் நோக்கிய நடைபயணம் ஆரம்பிக்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here