me too இயக்கத்தை கேலி செய்த ட்ரம்ப்!

#me too இயக்கத்தைக் கேலி செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அதன் விதிகள் காரணமாக தன்னைத் தானே சென்சார் செய்துகொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள், சமூக வலைதளங்களில் #metoo இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர். திரையுல பிரபலங்கள் தொடங்கி, பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த இயக்கம் குறித்துக் கேலி செய்துள்ளார் ட்ரம்ப்.

பென்சில்வேனியாவில் நடைபெற்ற இடைக்கால தேர்தல் பேரணியில் கலந்துகொண்டார் ட்ரம்ப். அப்போது பேசிய அவர், ”பென்சில்வேனியாவில் குடியரசுக் கட்சியினர் நீண்ட காலமாக வெற்றி பெறவில்லை. ஆனால் ஒவ்வொரு குடியரசுக் கட்சியினரும் தாங்கள் வெல்லப் போவதாக நினைத்துக் கொள்வார்கள். அதைச் சொல்வதற்கு ஒரு சொற்றொடர் இருக்கிறது. (“the girl that got away” – அன்புக்குரியவர்களின் பிரிவைச் சொல்லும் சொற்றொடர்)

ஆனால் மீடூ இயக்க விதிகளின் காரணமாக அதை நான் சொல்ல மாட்டேன். சொல்லாமல் எனக்கு நானே தணிக்கை செய்துகொள்கிறேன். சொன்னால் ட்ரம்ப் சொன்னதைக் கேட்டீர்களா, ட்ரம்ப் சொன்னதைக் கேட்டீர்களா, என்று பத்திரிகைக்காரர்கள் துளைத்து எடுத்துவிடுவார்கள்.

அதனால் ”the person that got away” என்று சொல்கிறேன்” என்றார் ட்ரம்ப்.

‘கேர்ள்’ என்று சொன்னாலே மீடூ இயக்கத்தினர் எதிர்ப்புத் தெரிவிப்பர் எனப் பொருள்படும் வகையில் ட்ரம்ப் பேசியதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here