முதல்வர் நிதிஷ் மீது, ‘ஷூ’ வீசியவர் கைது

பீஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் மீது, ‘ஷூ’ வீசிய நபரை, போலீசார் கைது செய்தனர்.

பீஹார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இந்த மாநில தலைநகர், பாட்னாவில், சமீபத்தில், ஐக்கிய ஜனதா தளத்தின், இளைஞரணி அமைப்புடன், முதல்வர் நிதிஷ் குமார் கலந்துரையாடினார்.

அப்போது, அவுரங்கபாதைச் சேர்ந்த, சந்தன் குமார், முதல்வர் நிதிஷ் குமார் மீது, ‘ஷூ’வை வீசினார்.

தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவரை கைது செய்தனர். விசாரணையில், ‘நான் உயர் ஜாதி பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், இட ஒதுக்கீடு காரணமாக, வேலை கிடைக்கவில்லை. இந்த கோபத்தில் தான், முதல்வர் மீது, ஷூவை எறிந்தேன்’ என, போலீசாரிடம், சந்தன் குமார் தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here