அடுத்த #metoo புயல்: அத்துமீறியது தனுஷா?

நடிகை அமைரா தஸ்தூர், அனேகனில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார். நல்ல அழகும், நடிப்பு திறனும் இருந்தும் பின்னர் தமிழ் படங்களில் அவ்வளவாக நடிக்கவில்லை. இதற்கு அவர் எதிர்கொண்ட பாலியல் அத்துமீறலே காரணமென்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது வைத்த #metoo புகாரை ஒட்டி பலரும் மனம் திறந்த தங்களுக்கு திரைத்துறையில் நேர்ந்த பாலியல் அச்சுறுத்தல்களை வெளியில் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். நடிகை அமைரா தஸ்தூரும் இப்பொழுது மனம் திறந்திருக்கிறார்.

“நான் ஒரு தமிழ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கையில் படத்தின் நாயகன் ஒரு காட்சிக்கான படப்பிடிப்பின் போது தன்னை மிக இறுக்கமாக கசக்கிப் பிழிவதைப் போல அணைத்து, இந்தப் படத்தில் உன்னுடன் நடிப்பதில் அவருக்கு மிகவும் சந்தோசம் என்று ரகசியமாகக் கிசுகிசுத்தார். இந்த நிகழ்வால் மிகவும் மனப்பாதிப்புக்கு உள்ளான நான் அதன் பிறகு அந்தப் படப்பிடிப்பு நாட்களில் குறிப்பிட்ட அந்த நடிகருடன் பேசுவதைத் தவிர்த்து வந்தேன். படத்தின் நாயகனை பொருட்படுத்தாமல் இருக்க முயன்றேன். நடந்ததை நினைத்து மிகவும் மன வேதனைப் பட்டு வந்தேன்“ என குறிப்பிட்டுள்ளார்.

இத்தனை விவரங்களைக் கூறியபின்னும் நாயகனது பெயரை வெளியிடத் தயங்கும் அமைரா, அந்த நாயகன் கோலிவுட்டில் செல்வாக்கு மிக்கவர் என்பதால் தன்னால் அவருடைய பெயரை வெளிப்படையாக தெரிவிக்க தயங்குவதாகவும் கூறினார். அதுமட்டுமல்ல, தவறு செய்த நடிகரைக் கண்டிக்காமல் படப்பிடிப்புக் குழுவினர் அமைராவை வற்புறுத்தி குறிப்பிட்ட அந்த நடிகரிடம் மன்னிப்புக் கேட்க வைத்த அவலமும் அப்போது அரங்கேறியதாகத் தெரிவித்துள்ளார் அமைரா தஸ்தூர்.

இந்தியாவில் பாலிவுட்டில் நடிகை தனுஸ்ரீ தத்தா, விண்டா நந்தா, சந்தியா மிருதுள், நடிகை கங்கனா ரணாவத், டோலிவுட்டில் நடிகை லதா மாதவி, ஸ்ரீரெட்டி, கோலிவுட்டில் பாடகி சின்மயி எனத் தொடர்ந்து மீ டுவில் இணையும் பிரபலங்களில் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்தியப் பிரபலங்களில் நடிகரும் தயாரிப்பாளருமான அலோக்நாத், முன்னாள் பத்திரிகையாளரும் இந்நாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான எம் ஜே அக்பர், பத்திரிகையாளர் பிரகாஷ் எம் சுவாமி, காமெடி நடிகர் உத்சவ் சக்ரவர்த்தி, இந்தி நடிகர் நானா படேகர், இயக்குனர் விவேக் கோத்தாரி, கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, உள்ளிட்ட பலரும் இப்படி #metoo புயலில் சிக்கி அம்பலமாகி நிற்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here