யாழ் ஒஸ்மானியா கல்லூரி சமூகத்திரை பாராட்டி கௌரவிப்பு

யாழ் ஒஸ்மானியா கல்லூரி 2018 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி சித்தியெய்திய மாணவர்களை கௌரவித்தலும் மற்றும் 4ம் 5 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குகும் நிகழ்வு நேற்று (11) நடைபெற்றன.
யாழ் ஒஸ்மானியா கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில்  நாடாளுமன்ற உறுப்பினர்  விஜயகலா மகேஸ்வரனின்  ஏற்பாட்டில் யாழ் மாநகரசபை உறுப்பினர் கே.எம்  நியாஸ் (நிலாம்) தலைமையில் இந்நிகழ்வு  இடம்பெற்றது.
இதன் போது அதிபர்  ஆசிரியர்  பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் மேற்படி நிகழ்விற்கு தனது இம்மாத சம்பளத்தினை மாநகர சபை உறுப்பினர் வழங்கியமை சுட்டிக்காட்டத்தக்கது.
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here