இந்தியன் 2 வில்லன் இவரா?

இயக்குனர் ஷங்கர் ரஜினியின் 2.0 படத்தை முடித்த பிறகு, கமலை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். உலகநாயகனுடன் ஷங்கர் கைகோர்த்த இந்தியன் மெஹா ஹிட் அடித்தது. இரண்டாம் பாகத்தையும் தெறிக்க விட வேண்டுமென்ற ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

தற்போது படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. விரைவில் சூட்டிங் ஆரம்பிக்கவுள்ளது.

இந்த நிலையில் தற்போது படத்தின் வில்லன் யார் என்ற விபரம் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரே வில்லனாக நடிக்கவுள்ளாராம்.

அக்ஷய் குமார் ஏற்கனவே ரஜினியின் 2.0 படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். ஹிந்தியிலும் அதிக வசூலை பெற வேண்டுமென்பதற்காகவே 2.0 குழு இந்த முடிவை எடுத்தது. இந்தியன் 2 குழுவும் அதே போர்முலாவை பின்பற்றுவதாக தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here