அரசியலமைப்புச் சபைக்கான சிவில் பிரதிநிதிகளை அங்கீகரித்தது நாடாளுமன்றம்!

அரசியலமைப்புச் சபைக்கு சிவில் பிரதிநிதிகள் மூவரை நியமிக்கும் பரிந்துரைக்கு நாடாளுமன்றம் இன்று ஒப்புதல் வழங்கியது. இதன்மூலம்புதிய பிரதம நீதியரசரை நியமிக்கும் இழுபறி நிலை விரைவில் முடிவுக்கு வருகிறது.

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைவாக ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான நியமனங்கள் சபாநாயகர் தலைமையிலான 10 பேர் கொண்ட அரசியலமைப்புச் சபையினால் ஒப்புதலளிக்கப்படவேண்டும்.

அரசியலமைப்புச் சபையில் சபாநாயகர் பதவி வழியாக தலைவராக இருப்பார். பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பதவி வழியாக உறுப்பினர்களாக இருப்பர். ஏனைய 6 உறுப்பினர்களில் 3 பேர் அரசியல் ரீதியாகவும் 3 பேர் சிவில் சமூகப் பிரதிநிதிகளாக இருப்பர். அவர்களை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் நியமிக்கப்பர்.

வெற்றிடமாக உள்ள 6 உறுப்பினர்களில் ஜனாதிபதியின் பிரதிநிதியான அமைச்சர் மகிந்த சமரசிங்கவின் பதவிக்காலம் நிறைவடையவில்லை. ஏனைய 5 உறுப்பினர்களை அரசியலமைப்புச் சபைக்கு நியமிப்பதில் இழுபறியான நிலை காணப்பட்டது.

அரசியலமைப்புச் சபைக்கான சிவில் சமூகப் பிரதிதிகள் மூவரை சபாநாயாகர் இன்று நாடாளுமன்றில் முன்மொழிந்தார்.

கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் மூத்த விரிவுரையாளர் நாகநாதன் செல்வக்குமரன், கல்வியாளரும், இராஜதந்திரியுமான ஜாவிட் யூசுப், முன்னாள் இராஜதந்திரி ஜயந்த தனபால ஆகியோரின் பெயர்களையே சபாநாயகர் முன்வைத்தார்.

அவர்கள் மூவரையும் நியமிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.

அரசியலமைப்பு சபைக்கான புதிய உறுப்பினர்களை நியமிக்கும் விடயத்தில் இழுபறிகள் நீடித்து வந்த நிலையில், புதிய பிரதமர் நீதியரசர் நியமனத்தில் சிக்கல்கள் எழுந்தது.

எனினும் சிவில் பிரதிநிகள் மூவரை அரசியலமைப்புச் சபைக்கு ஜனாதிபதி நியமனம் வழங்கினால், வரும் 22ஆம் திகதி பிரதம நீதியரசரை நியமிப்பதற்கான ஒப்புதலை அரசியலமைப்புச் சபை கூடி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இன்றைய தினத்துடன் நீதிச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் நிலையில் வரும் 2 வாரங்களுக்கு பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்படலாமென தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here