அர்ஜூன ரணதுங்க எனக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தார்: இந்திய விமானப் பணிப்பெண் குற்றச்சாட்டு!

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என இந்தியாவை சேர்ந்த விமானப் பணிப்பெண்ணொருவர் குற்றம்சாட்டியுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

மும்பாயின் ஹோட்டலொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

இந்தியாவிற்கான விஜயமொன்றின் போது மும்பாய் ஹோட்டலில் ரணதுங்க தன்னிடம் முறைகேடான விதத்தில் நடந்துகொண்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆண்களால் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண்கள் #MeToo ஹாஷ்டேக்கில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக இது உலகளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பல பெண்களும் துணிச்சலுடன் தமக்கு நேர்ந்த கொடுமைகளை பகிரங்கப்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இந்திய விமானப்பணிப்பெண் இந்த அதிர்ச்சி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

எனது மார்பில் கைவைத்த ரணதுங்க அநாகரீகமான முறையில் நடந்து கொள்ள தொடங்கினார், நான் அச்சமடைந்தேன் அவரது காலில் உதைத்தேன். நான் அர்ஜூன ரணதுங்கவை எச்சரித்தேன். பொலிஸாரிடம் முறையிடுவேன், இந்தியாவில் அந்த நாட்டு பிரஜையை இலங்கையர் ஒருவர் துன்புறுத்துவதை பொலிசாரிடம் முறையிட்டால் கடவுச்சீட்டை இரத்துச் செய்யப்படும் என எச்சரித்தேன்.

நான் அங்கிருந்து ஓடிச்சென்று உடனடியாக இது குறித்து ஹோட்டல் பணியாளர்களிடம் முறையிட்டேன். எனினும் அவர்கள் இதனை பாரதூரமான விடயமாக கருதவில்லை. தனிப்பட்ட விசயத்தில் தலையிடவில்லையென கூறிவிட்டனர் என அந்த பெண் முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

அர்ஜூன ரணதுங்க மட்டுமல்ல, வேறுபல ஆண்களை பற்றியும் அவர் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here