சுமந்திரன் நேற்று நாடாளுமன்றத்தில் என்ன கூறினார் தெரியுதா?

மோதல்கள் இடம்பெற்றபோது ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். யுத்த நிலைமைகளின் பின்னர் நாம் கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு தீர்வுகள் நோக்கி பயணிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இழப்பீடுகள் தொடர்பான அலுவலக சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் நேற்று புதன்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் பழிவாங்கல் காரணிகளாக அமைந்துவிடக்கூடாது. இழப்பீடுகள் குறித்த அலுவலகத்தால் பரிந்துரைக்கப்படும் கொள்கைத் திட்டங்கள் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்படும் நிலையில் அவை அரசியல் மயப்படுத்தப்படுவதற்கும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. மேலும் யுத்தத்தின் போது ஏற்பட்ட பல பாதிப்புக்களின் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here