தொழிலதிபர் மீதான வழக்கை கைவிட்ட நடிகை!

0

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களாக தொழிலதிபர் நெஸ்வாடியாவும், நடிகை பிரித்தி ஜிந்தாவும் இருக்கின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது நெஸ்வாடியா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை பிரித்தி ஜின்தா புகார் அளித்தார்.

அதனடிப்படையில் நெஸ் வாடியா மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கை ரத்து செய்யக் கோரி நெஸ் வாடியா மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இருதரப்பினரும் பேசி பிரச்சினையை தீர்த்து கொள்ளுமாறு நீதிபதி அறிவுறுத்தியதை அடுத்து, வழக்கை முடித்துக் கொள்வதாக பிரித்தி ஜிந்தா தெரிவித்தார். இதையடுத்து வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here