பிரதமர் நீக்கப்படவில்லையாம்: ஸ்கைப்பில் தோன்றினார்!

இலங்கைத்தீவின் இனச்சிக்கலில் ஈழத்தமிழர்களின் அரசியற்தீர்வுக்கான பொறிமுறையாக பொதுவாக்கெடுப்பே அமைகின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

பொதுவாக்கெடுப்பு நோக்கிய செயற்திட்டத்துக்கான கருத்துருவாக்கத்தினை தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் ஈழத்தமிழ் மக்களிடத்தில் வளர்த்தெடுக்க வேண்டிய தேவை உள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்த ஊடகர்கள், மற்றும் சமூக-அரசியல் ஆர்வலர்கள் ஆகியோருடன் கருத்துப்பரிமாற்றக் கூட்டத்திலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், அமெரிக்காவில் இருந்து இணையவழிப் பரிவர்த்தனையூமாக கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், கற்ரலோனிய மக்களிடம் தனி நாட்டுக்கான
கத்தலோனிய பொது வாக்கெடுப்புக்கான கருத்துருவாக்கம் கத்தலோனிய மக்களிடம் விதைக்கப்பட்டு, மக்கள் அதனை இறுகப் பற்றிக் கொண்டமையால,; ஸ்பெயின் அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், ஐரோப்பிய யூனியனின் எதிர்ப்புக்கு மத்தியிலும்,  பொது வாக்கெடுப்பினை கத்தலோனியர்கள் வெற்றிகரமாக சமீபத்தில் நடாத்தியிருந்தார்கள்.

பொது வாக்கெடுப்பு என்ற பொறிமுறையை நோக்கி கத்தலோனிய மக்கள், மத்திய ஸ்பெயின் நாட்டுக்கு எதிராக அமைதி வழியில் போராடிக் கொண்டே இருக்கின்றனர்.

ஈழத் தமிழர்களுக்கும் தமது சுயநிர்ணய அடிப்படையில் தமது தேசத்தை வென்றெடுக்க, “yes to Referendum” செயற்பாடும் உறுதிப்பாடும் முக்கியமானது. எனவே பொது வாக்கெடுப்பு என்ற கருத்தை மக்களிடம் எழுத்தாளர்கள், விமர்சகர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் முன்வந்து இடைவிடாது பரப்ப வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

தமிழர் தாயகத்தின் மீதான சிங்களக்குடியேற்றங்கள், சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான செயற்பாடுகள் என நீதிக்கும் உரிமைக்குமான ஈழத்தமிழ் மக்களின் தொடர் செயற்பாடுகள் குறித்து அவர் விளக்கம் அளித்திருந்தார்.

முன்னதாக, வி.உருத்திகுமாரன் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக வெளியான செய்தியை, நா.தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுவிவகாரங்களுக்கான அமைச்சு மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here