மனோவின் அமைச்சின் அபிவிருத்தி கலந்துரையாடல்: கூட்டமைப்பில் பலர் மிஸ்ஸிங்!

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல் இன்று (10) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

யாழ் மாவட்ட செயலாளர் என்.வேதநாயகன் தலைமையில் நடந்த இந்த கலந்துரையாடலில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்rர் மனோ கணேசன் கலந்து கொண்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், ஈ.சரவணபவன் ஆகிய இருவர் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும், மனோ கணேசனிற்குமிடையிலான வார்த்தை மோதல் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

யாழிலுள்ள கணிசமான உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

இதேவேளை, இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் மனோ கணேசன் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை, கந்தரோடை தமிழ் கலவன் பாடசாலைகளிற்கு நேரில் சென்று பார்வையிட்டார். சுன்னாகம் ஸ்கந்தவரோய கல்லூரி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

பின்னர் சுன்னாகம் தபால் நிலையம், சுன்னாகம் பொதுச்சந்தை ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டார். சுன்னாகம் தபால் நிலைய புனரமைப்பு நிதியை நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கோரியபோது, தனது அமைச்சினூடாக மனோ கணேசன் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here