இன்று நள்ளிரவு எரிபொருள் விலை அதிகரிக்கிறது!

எரிபொருள்களுன் விலையை மாதாந்தம் மாற்றம் செய்யும் வகையில் விலைச் சூத்திரத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் நிதி அமைச்சின் நடவடிக்கைக்கு அமைவாக எரிபொருள்களின் விலைகள் தொடர்பான அறிவிப்பு இன்று இரவு வெளியிடப்பட்டது.

இதற்கமைய பெற்றோல் 92 ஒக்ரைனின் விலை 6 ரூபாவாலும் பெற்றோல் 95 ஒக்ரைனின் விலை 8 ரூபாவாலும் அதிகரிக்கப்படுகிறது.

டீசலின் விலையில் மாற்றமில்லை. சுப்பர் டீசலின் விலை 8 ரூபாவாலும் அதிகரிக்கப்படுகிறது.

இன்று (10) புதன்கிழமை நள்ளிரவு முதல் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பெற்றோல் (92 ஒக்ரைன்) 155 ரூபாவாகவும் பெற்றோல் (95 ஒக்ரைன்) 169 ரூபாவாகவும் சுப்பர் டீசல் 141 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுகிறது.

உலக சந்தையில் ஏற்படும் எரிபொருள் விலை மாற்றத்துக்கு ஏற்ப இலங்கையில் பெற்றொல் மற்றும் டீசல் விலைகளை மாற்றியமைக்கும் விலைச் சூத்திரத்தை நிதி அமைச்சு அமைச்சரவைக்கு முன்வைத்தது. உலக சந்தையில் எரிபொருளுக்கு ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப இலங்கையில் ஒவ்வொரு மாதம் 10ஆம் திகதியும் எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கும் அல்லது குறைவடையும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here