பெண் சட்டத்தரணிகளும் இனி காற்சட்டை, கோட் அணியலாம்: இலங்கை நீதித்துறையில் அதிரடி மாற்றம்!

இலங்கை நீதிமன்றங்களில் பெண் சட்டத்தரணிகள் அணியும் உடை பற்றி 40 ஆண்டுகளின் பின் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. பெண் சட்டத்தரணிகள் கணுக்கால் வரையான கறுப்பு நிற நீண்ட காற்சட்டை மற்றும் முழுக்கையுடைய மேற்சட்டை அணிய அனுமதிக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தால் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீதிச் சேவையிலிருந்து இந்த வாரத்துடன் ஓய்வு பெற்றுச் செல்லும் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், இந்த திருத்தத்தை முன்னெடுத்துள்ளார்.

இலங்கை நீதிமன்ற நடைமுறைகளில் நீதிபதிகள், சட்டத்தரணிகளின் உடை பற்றிய 1978ஆம் ஆண்டின் 7ஆம் விதியான பெண் சட்டத்தரணிகளின் உடை பற்றிய பந்தி நீக்கப்பட்டு புதிய உடை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் வெளியிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் எஸ்.ஈ.வனசுந்தர, பி.பீ.அலுவிஹார, கே.எஸ்.ஜே.த. அப்ரூ ஆகியோர் கையொப்பமிட்டு இந்த சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை கடந்த 4ஆம் திகதி வெளியிட்டுள்ளனர்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 1978ஆம் ஆண்டின் நீதிபதிகளினதும் சட்டத்தரணிகளினதும் நீதிமன்ற உடை பற்றிய விதிகளின் 7ஆம் விதி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக புதிய விதி பதிலீடு செய்யப்படுகிறது.

பெண் சட்டத்தரணிகளின் உடை நீதிமன்றில் பின்வருமாறு இருத்தல் வேண்டும்.

வெள்ளை நிற, கறுப்பு நிற, சாம்பல் நிற அல்லது ஊதா நிற சேலையும் சட்டையும் அல்லது முழங்காலிற்கு கீழ் வெள்ளை நிற, கறுப்பு நிற, சாம்பல் நிற அல்லுது ஊதா நிற நீண்ட சட்டை அல்லது கோற் மற்றும் கணுக்கால் வரை நீண்டகறுப்பு நிறக் காற்சட்டை மற்றும் காற்சட்டைக்குள் உட்செலுத்தி, கொலர் உடையதாக கழுத்துவரை அணியப்பட்ட வெள்ளை நிற நீண்ட கையுடைய மேற்சட்டை மற்றும் கறுப்பு நிற நீள அங்கி என்றுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here