50 லட்சம் இழப்பீடு பெற்றார் நம்பி நாராயணன்

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மீதான சதி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை ஏற்ற கேரள அரசு அவருக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடை வழங்கியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றியவர் நம்பி நாராயணன்,74 இவர், மேலும் இரு விஞ்ஞானிகள் உட்பட ஐந்து பேர், 1994ல், விண்வெளி ஆராய்ச்சி திட்டம் குறித்த ரகசிய ஆவணங்களை, வெளிநாடுகளுக்கு கடத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, நம்பி நாராயணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதனை சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. விசாரணையில் சதி திட்டம் நடக்க வில்லை என சி.பி..ஐ தெரிவித்தது. கடந்த செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து நேற்று தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரூ. 50 லட்சத்திற்கான காசோலையை நம்பி நாராயணனிடம் முதல்வர் பினராயி விஜயன் ஒப்படைத்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here