பேஸ்புக்கில் விமர்ச்சிக்கிறார்கள்: பதில் முதலமைச்சராக இருந்து என்ன செய்தேன் தெரியுமா?

எனக்கு பதில் முதலமைச்சர் பதவி கிடைத்தவுடன் முகநூலில் பல்வேறு விதமான வாதங்களை முன்வைத்திருந்தனர். ஒரு சிலர் பதில் முதலமைச்சர் பதவியினை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறார் என கேள்வி எழுப்பி இருந்தனர். எனக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் போதெல்லாம் அதனை சரியாக பயன்படுத்தி நுவரெலியா, மாத்தளை, கண்டி ஆகிய மூன்று மாவட்டங்ளுக்கு பல்வேறு வேலைகளை செய்திருக்கின்றேன்.

இன்று பதில் முதலமைச்சராக கிடைத்த பதவியினை கொண்டு 422 பேருக்கு விவசாய அமைச்சு மற்றும் திணைக்களங்களுக்கு நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுத்திருக்கிறேன் என முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களில் சேவையாற்றவென 67 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு அட்டன் சீடா வள நிலையத்தில் நேற்று (09) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு விவசாய அமைச்சின் செயலாளர், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

என்னுடைய மூன்று வருட ஆட்சி காலப்பகுதியில் இந்த சமூகத்திற்கு என்னனென்ன செய்திருக்கிறேன் என என்னால் பட்டியலிட்டு காட்ட முடியும். எனவே இந்த அரசு துறை நியமனங்கள் இலகுவாக கிடைப்பதில்லை. போராடியே பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில் தங்களுக்கு கிடைத்த இந்த நியமனத்தின் மூலம் தொழிலுக்கு கௌரவம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here