ஆதித்யாவ லவ் பண்றேனா?: ‘96’ குட்டி த்ரிஷா விளக்கம்!

‘96’ திரைப்படத்தில் இளம் வயது விஜய் சேதுபதி-த்ரிஷாவாக நடித்த ஆதித்யா மற்றும் கௌரி காதலிப்பதாக வெளியான வதந்திக்கு கௌரி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பிரேம் குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘96’ திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. பள்ளிப்பருவத்தில் அரும்பிய காதலையும், 22 ஆண்டு கழித்து அதன் நினைவுகளையும் உணரும் காதல் கதையாக ’96’ திரைப்படம் உருவாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் பள்ளிப்பருவ கதாபாத்திரங்களில் நடித்த ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷான் ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். பாராட்டு மழையில் திளைத்திருக்கும் இவர்கள் நிஜத்திலும் காதலில் விழுந்ததாக தகவல் வெளியாகின.

சமீபத்தில் ஜானுவாக நடித்த கௌரியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதித்யா பாஸ்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதையடுத்து இவர்களது காதல் கதையை நெட்டிசன்கள் ஜோடிக்க தொடங்கினர். இந்நிலையில் கௌரி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

அவரது ட்வீட்டில், ‘ஆதித்யா பாஸ்கரும் நானும் காதலிக்கவில்லை. ராம்-ஜானு கதாபாத்திரத்தில் திரையில் மட்டும் காதலர்களாக நடித்தோம். நிஜத்தில் அல்ல. தவறான செய்திகள் பரப்புவதை நிறுத்துங்கள். கண்ணியம் காட்டுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here