யாழில் துப்பாக்கிச்சூடு!


அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது  இனம் தெரியாதவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

அரியாலையில் சட்டவிரோத மண் கடத்தல் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், அதனை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலைமையில் நேற்று சட்டவிரோத மண் கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. சிவில் உடையில் வந்த இருவர், உழவு இயந்திரங்களை நிறுத்துமாறு கட்டளையிட்ட போதும், உழவியந்திரங்கள் வேகமாக தப்பிச் செல்ல முனைந்த போது, முதலில் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் உழவுஇயந்திரத்தை நோக்கியும் சூடு நடத்தப்பட்டதாக அந்த பிரதேசத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர். எனினும், மணல் கடத்தல்காரர்களிற்கு எந்த ஆபத்துமின்றி தப்பித்து சென்றுள்ளனர்.

கடந்த வருடம் ஒக்ரோபர் 22ம் திகதி இதேபகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரத்தின் மீது சிவில் உடையில் வந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர். இதில் 24 வயதான டொன்பொஸ்கோ டினேசன் என்ற இளைஞன் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிசார் இதுவரை கருத்தெதையும் தெரிவிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here