பன்னிரண்டு வேங்கைகளின் நினைவேந்தல்: அன்பழகனின் 96 வயது தாயாரும் அஞ்சலி!

குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரண்டு போராளிகளின் நினைவேந்தல் நேற்று மாலை வல்வெட்டித்துறை- தீருவிலில் இடம்பெற்றது. சிவில் உடையில் காவல்துறையினர் பிரசன்னமாகியிருந்த போதும் அதனையும் புறந்தள்ளி மக்களின் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய இலங்கை கூட்டுச்சதியால் தற்கொடையான குமரப்பா மற்றும் புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு போராளிகளது 31வது ஆண்டு நினைவேந்தல் நேற்றாகும். எனினும், காலையில் இடம்பெற்ற நிகழ்வில் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.

இந்தநிலையில் மாலையில், தீருவில் அரங்கில் நினைவேந்தல் மக்களால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தற்கொடையான பன்னிருபோராளிகளுள் ஒருவரான லெப்டினன்ட் அன்பழகனின் 96 வயதுடைய தாயார் பொதுச்சுடரை ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தியிருந்தார்.

வல்வெட்டித்துறையினை சேர்ந்த மூத்த பிரஜைகள், பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை பிரதித்தலைவர் சி.சதீஸ் உள்ளிட்ட பலர் மலரஞ்சலி செலுத்தியிருந்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here