கேபிள் லைசன்சுக்கும் விண்ணப்பித்தது அங்கஜன் குடும்பம்!

பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் குடும்பம், தொலைக்காட்சி இணைப்புக்களிற்கான கேபிள் வர்த்தகத்திலும் ஈடுபடும் முயற்சியில் இறங்கியுள்ளது.  இதற்கான விண்ணப்பத்தை அவர்கள் சமர்ப்பித்துள்ள தகவலை தமிழ்பக்கம் பெற்றுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்துடன் தற்போது இரண்டு நிறுவனங்கள் இலங்கையில் இயங்கி வருகின்றன. யாழை சேர்ந்த ஆஸ்க் கேபிள் விசன் நிறுவனம், கொழும்பை சேர்ந்த சிற்றி கேபிள்ஸ் லிங்ஸ் நிறுவனம் இரண்டுமே அவை.

இவை இரண்டின் அனுமதிப்பத்திரமும் வரும் ஆண்டுடன் காலாவதியாகிறது. அனுமதியை நீடிப்பதெனில், மீள் விண்ணப்பம் மூலம் செய்யலாம். இரண்டு வருடங்களிற்கு ஒருமுறை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு விண்ணப்பங்களை மீள்பரிசீலனை செய்கிறது.

இந்தநிலையில், சதாசிவம் இராமநாதனின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் ஒன்றும், கேபிள் வலையமைப்பிற்காக விண்ணப்பித்துள்ளது. விவசாய பிரதியமைச்சரான அங்கஜனின் தந்தையாரே, சதாசிவம் இராமநாதன் ஆவார்.

ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் நெருக்கமாக உள்ளதால், கேபிள் அனுமதியை அவர்கள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, கப்பிடல் எப்.எம் என்ற பெயரில் அங்கஜன் இராமநாதன் குடும்பம் வானொலியொன்றை நடத்தி வருவதுடன், கப்பிடல் டிவியென்ற பெயரில் தொலைக்காட்சி சேவையொன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here