வெள்ளி தட்டில் விருந்து: கர்நாடகா அமைச்சரின் ஆடம்பரத்தால் சர்ச்சை!

கர்நாடகாவில், நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், சக அமைச்சர்களுக்கு தனது வீட்டில் அளித்த காலை உணவு விருந்தின் போது அனைவரும் வெள்ளி தட்டில் சாப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில், மதசார்பற்ற ஜனதா தளம் – காங்., கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி செயல்பட்டு வருகிறது. காங்கிரசை சேர்ந்த சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராக உள்ளார். வெறும், 32 எம்.எல்.ஏ, க்களை வைத்துக் கொண்டு குமாரசாமி முதல்வராக செயல்படுவது காங்கிரசில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

இதை சரிக் கட்ட, காங்கிரசில் பலரும் அமைச்சர் பதவி கேட்டு நச்சரித்து வருகின்றனர். வரும், 15ம் தேதி அமைச்சரவை விஸ்தரிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

சித்தராமையா எங்கே?

இச்சூழ்நிலையில், சிவக்குமார் பெங்களூருவில் உள்ள வீட்டில், துணை முதல்வர் பரமேஸ்வரா உள்பட சக காங்., அமைச்சர்களுக்கு காலை உணவு விருந்து அளித்தார். இதில், வெள்ளி தட்டுகளிலும், வெள்ளி பாத்திரங்களிலும் உணவு வகைகள் வழங்கப்பட்டன. இந்த விருந்து புகைப்படங்களை காங்., அமைச்சர்கள் சிலர் டுவிட்டரில் வெளியிட, வெள்ளி தட்டு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.

இந்த விருந்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்., தலைவர் தினேஷ் குண்டுராவ், உள்ளாட்சி துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி, சுரங்கத்துறை அமைச்சர் ராஜேஸ்வர் பாட்டீல் ஆகியோர் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சிவக்குமாரிடம் கேட்ட போது ‘ அனைத்து ஆலோசனை கூட்டங்களிலும், சித்தராமையா பங்கேற்பது, சாத்தியமில்லை. அவரது ஆலோசனைப்படி தான் நாங்கள் செயல்படுகிறோம். மாநில காங்., தலைவர் தினேஷ் குண்டுராவ், வெளிநாடு சென்றுள்ளார். அதனால் அவர் வரவில்லை,” என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here