கூழ் VS மணிவண்ணன் வழக்கு இணக்கசபைக்கு: கூழின் கருத்தால் நீதிமன்றமே சிரிப்பில் ஆழ்ந்தது!

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூழை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிரான வழக்கை இணக்க சபைக்கு மாற்றி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இணக்க சபையில் முறைப்பாட்டாளரும் எதிரியும் இணக்கப்பாட்டுக்கு வராவிடின் வழக்கை வரும் நவம்பர் 14ஆம் திகதி விளக்கத்துக்கு நியமிப்பதாகவும் நீதிமன்று கட்டளை வழங்கியது.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூழை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தொடர்ந்தனர்.

குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை 486ஆம் பிரிவின் கீழ் ஆள் ஒருவரை அச்சுறுத்தியதாக சட்டத்தரணி மணிவண்ணனுக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. முறைப்பாட்டாளர் மன்றில் தோன்றினார்.

எதிராளியான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மன்றில் முன்னிலையானார். அவர் சார்பில் சட்டத்தரணி கு.குருபரன், மு.றெமீடியஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முற்பட்டனர்.

பொலிஸாரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தின் அடிப்படையில் முறைப்பாட்டாளரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் மற்றும் எதிரியான சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோரை இணக்க சபைக்குச் சென்று இணக்கப்பாட்டுச் செல்வது தொடர்பில் ஆலோசிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.

இரு தரப்பும் இணக்கப்பாட்டு வராவிடின் வழக்கை வரும் நவம்பர் 14ஆம் திகதிக்கு விளக்கத்துக்கு நியமிப்பதாக நீதிவான் கட்டளையிட்டார்.

முன்னதாக அடுத்த தவணையை ஜனவரி மாதம் நீதிவான் திகதியிட்டபோது, கூழ் அதற்கு ஆட்சேபணை தெரிவித்தார். “எதிரியின் அச்சுறுத்தலால் நான் பயந்தபடி வாழ்கிறேன். இந்த நீதிமன்றத்திற்கும் பயந்தபடிதான் வந்தேன். நீண்டகால தவணையிடாமல் குறுகிய தவணையிடுங்கள்“ என கேட்டுக் கொண்டார். அவர் அப்படி கூறிய போது, நீதிமன்றமே சிரிப்பில் ஆழ்ந்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here