கூகுள் நிறுவன தலைமை பொறுப்பில் அடுத்த தமிழர்.. யார் இந்த பிரபாகர் ராகவன்?

புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் விளம்பர வர்த்தக பிரிவின் தலைவராக சென்னையைச் சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சுந்தர் பிச்சை என்பவரை கடந்த 2015-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் நியமனம் செய்தது.

இந்நிலையில், 7 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக மதிப்பை கொண்ட கூகுள் நிறுவனத்தின் விளம்பர வர்த்தக பிரிவின் தலைவராக பிரபாகர் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் பிறந்த பிரபாகர், சென்னை ஐஐடியில் பட்டப்படிப்பை முடித்த பின் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளார். அதன்பின், யாகூ லேப்ஸ் மற்றும் ஐபிஎம் நிறுவனங்களில் பணியாற்றி வந்த அவரை, தற்போது கூகுள் நிறுவனம் தன் வர்த்தக பிரிவு தலைவராக நியமனம் செய்துள்ளது.

இதுகுறித்து தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறுகையில், “விளம்பர வர்த்தக பிரிவுக்கு பிரபாகர் ராகவனை விட, வேறு ஒருவர் மாற்றாக இருக்க முடியாது. அந்த அளவுக்கு நம்பமுடியாத மேலாண்மை அனுபவமும் ஆழ்ந்த தொழில்நுட்ப நிபுணத்துவமும் பெற்றவர் பிரபாகர் ராகவன்” என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், சர்வதேச நிறுவனங்களான காக்னிசென்ட்டின் தலைமை செயல் அதிகாரியாக பிரான்சிஸ்கோ டிசோசாவும், அடோப் நிறுவனத்தில் சாந்தனு நாராயணும் தலைமை பொறுப்பில் இருக்கும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here