வவுனியா, முல்லைத்தீவு கஸ்டப்பிரதேச பாடசாலைகளிலிருந்து அசத்திய மாணவிகள்!

வெளியாகியுள்ள புலமை பரிசில் முடிவுகளின்  படி வவுனியா சிவபுரம் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் கல்விமயிலும்  பாலகுமார் ஹரித்திக்ஹன்சுஜா என்ற மாணவி 197 புள்ளிகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தையும் பெற்று மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

குறித்த சிறுமியின் தந்தை சாரதியாக பணிபுரிந்து வருவதுடன் இவர் கல்விகற்ற சிவபுரம் அ.தக.  பாடசாலை கஸ்ட பிரதேச பாடசாலையாக உள்ளமை குறிப்பிட தக்கது.

பின்தங்கிய கிராமத்தில் இருந்து கல்விகற்று தமது மாணவி சாதனை படைத்திருப்பது பாடசாலைக்கு மட்டுமல்லாமல் மாவட்டத்திற்கே பெருமை சேர்ந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் பீற்றர் ஜெரா தெரிவித்தார்.

குறித்த பாடசாலையில் 9 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோன்றியதுடன் இருவர் சித்திபெற்றுள்ளனர். ஹரித்திக் ஹென்சுஜா, செல்வகுமார் டிலானி ஆகிய மாணவிகளே சித்திபெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

குறித்த மாணவிகளின் ஆசிரியரான முத்துகுமார் லோகேஸ்வரியின் முயற்சியே தமது மகள் சித்திபெற முடிந்ததாக மாணவியின் தாயார் தெரிவித்தார்.

பாலகுமார் ஹரித்திக்ஹன்சுஜா

இதேவேளை, முல்லைத்தீவு நெடுங்கேணி மாமடு,பழம்பாசி அ.த.க.பாடசாலை மாணவி துஷ்சாதனா 195 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலையில் உள்ளார். இந்த பாடசாலையும் கஸ்ட பிரதேச பாடசாலையென்பதுடன், பௌதீக வளங்கள் இல்லாமலிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

துஷ்சாதனா
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here