புலமைப்பரிசில் முடிவு; மாவட்டரீதியில் முதலிடம் பிடித்தவர்கள் இவர்கள்தான்!

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் தேசிய ரீதியில் இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டனர். வவுனியாவை சேர்ந்த மாணவி தேசியரீதியில் மூன்றாமிடத்தை பெற்றார். கிளிநொச்சி மாணவன் நான்காமிடத்தை பெற்றார்.

இப்படி இம்முறை தமிழ் மாணவர்கள் கலக்கிய புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்டரீதியாக பெறுபேறுகள், யார் முதலிடம் பிடித்தார்கள் என்பதையும் அறிய வேண்டாமா,

மாவட்டரீதியில் முதலிடத்தை பெற்ற சில மாணவர்களின் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் முதலிடத்தை பிடித்த இரண்டு மாணவர்கள், தேசிய ரீதியிலும் இரண்டாமிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்கள் 198 புள்ளிகளை பெற்றிருந்தனர். யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையின் மாணவன் மகேந்திரன் திகழொளிபவன்,சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையை சேர்ந்த மாணவி நவாஸ்கன் நதி ஆகியோரே மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றனர்.

மகேந்திரன் திகழொளிபவன்
நவாஸ்கன் நதி

கிளிநொச்சி மகாவித்தியாலத்தை சேர்ந்த கனகலிங்கம் தேனுஜன் 196 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுக் கொண்டார். தேசியரீதியில் நான்காமிடத்தையும் இவர் பெற்றார்.

மட்டக்களப்பு உன்னிச்சை 6ம் கட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த ஜெ.துகிந்தரேஷ், மாவட்டத்தின் முதல்நிலை மாணவனாக சித்தியடைந்தார். 196 புள்ளிகளை பெற்ற இவர் தேசிய மட்டத்தில் நான்காமிடத்தையும் பெற்றிருந்தார்.

 திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் இரு மாணவர்கள் முதலிடத்தை பெற்றனர். இ.விதுஷ், எம்.சமாஷ் ஆகியோர் 193 புள்ளிகளை பெற்றிருந்தனர்.

முல்லைத்தீவு நெடுங்கேணி மாமடு,பழம்பாசி அ.த.க.பாடசாலை மாணவி துஷ்சாதனா 195 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலையில் உள்ளார்.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியை சேர்ந்த யாசின் டேவிட் சுஜீந்திரதாஸ் என்ற மாணவி 198 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவன் முதலிடத்தை பெற்றுக் கொண்டார். தி.திருக்குமரன் என்ற இந்த மாணவன் 187 புள்ளிகளை பெற்றிருந்தார்.

அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தை பொத்துவில் விபுலாந்தர் வித்தியாலய மாணவி நிதுர்ஷா தட்டிச் சென்றார். இவர் 171 புள்ளிகளை பெற்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here