ராஜபக்சவின் சிறுநீரகத்தில் 2 கிலோ நிறையுடைய கல்: வெற்றிகரமாக அகற்றினார் தமிழ் வைத்தியர்!

சிறுநீரகத்தில் இரண்டு கிலோ நிறையுடைய கல்லை சுமந்து அவஸ்தைப்பட்ட ஒருவருடைய உடலிலிருந்து வெற்றிகரமாக அது அகற்றப்பட்டுள்ளது. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

நொச்சியாகம, காலதிவுல்வெவ பகுதியை சேர்ந்த ஜீ.ஜீ. காமினி ராஜபக்ச (41) என்பவர் பாம்பு தீண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள், எக்ஸ்ரே பரிசோதனையும் செய்தனர். அப்போது அவரது இடதுபக்க சிறுநீரகத்திற்குள் பெரிய உருவங்கள் அவதானிக்கப்பட்டன.

அது குறித்த மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்ட வைத்தியர்கள், அவை கற்கள் என்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து கடந்த 2ம் திகதி அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. விசேட சத்திரிசிகிச்சை நிபுணர் ரி.அரவிந்தன் தலைமையில் சத்திரசிகிச்சை நடந்தது.

இது தொடர்பில் சத்திரிசிகிச்சை நிபுணர் ரி.அரவிந்தன் கருத்து தெரிவித்தபோது- “நோயாளியின் சிறுநீரகம் ஒன்றில் இவ்வளவு பெரிய கல் இருந்ததை நான் தற்போதுதான் முதலில் பார்த்துள்ளேன். சிறுநீரகத்தில் சிறிய கற்களை பார்த்திருக்கிறோம். இது வித்தியாசமான சம்பவம். அவரை உடனடியாக சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தினோம். சிறுநீரகத்தில் இருந்த இரண்டு கிலோ கிராம் கல்லை அகற்றுவது சுலமான காரியமல்ல.

நோயாளியின் சிறுநீரகத்தில் இருந்த கல்லை துண்டு துண்டாக அகற்றினோம். நோயாளி உடல் நலத்துடன் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சத்திர சிகிச்சை மூன்று மணநேரம் நடைபெற்றது. அனுராதபுரத்தின் குடிநீர் பிரச்சனை காரணமாகவே இப்படியான கற்கள் உருவாகின்றன. அனுராதபுரம் மக்கள் தண்ணீரை அதிகளவில் பருக வேண்டும். இதன் மூலம் சிறுநீர் குழாய், சிறுநீரகங்களில் கல் உருவாகுவதை தடுக்க முடியும். சிறுநீரகத்தில் சிறிய கல் உருவாகினாலும் நோயாளிக்கு அதிகமான வலி ஏற்படும். எனினும் இந்த நோயாளிக்கு அப்படியான வலி இருக்கவில்லை“ எனக் கூறியுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here