பெற்ற மகளிற்கு சூடு வைத்த தாய்!

மட்டக்களப்பில் பெற்ற மகளுக்கே இரும்புக்கம்பியை காய்ச்சி தாயொருவர் சூடு வைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எருவில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

11வயதுடைய சுதாகரன் மேனகா என்னும் சிறுமிக்கே தாயாரால் சூடு வைக்கப்பட்டுள்ளது. இரும்புக்கம்பியை காய்ச்சி கைகள், முகத்தில் சூடு வைக்கப்பட்டுள்ளது.

எருவில் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கற்றுவரும் குறித்த சிறுமி நேற்று (04) காலை பாடசாலைக்கு சென்றபோது காயங்களை அவதானித்த பாடசாலை ஆசிரியர்கள், உடனடியாக சிறுமியை களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சிறுமியின் இரண்டு கைகளிலும், முகத்திலும் சூடு வைக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு என்பனவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here