யாழ் குடா குடிநீர் திட்டத்திற்கு ஓகே!

மன்னாரின் பாலியாற்றிலிருந்து யாழ்ப்பாண குடாநாட்டிற்கு குடிநீரை கொண்டு செல்லும் திட்டம் குறித்த தீர்மானத்திற்கு வடமாகாணசபை இன்று பேரதரவு கொடுத்தது. இதன்மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆராய்வில் உள்ள திட்டம், ஆரம்பிக்கப்படுவதற்கான ஏதுநிலை தோன்றியுள்ளது.

வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் முன்மொழிந்த இந்த தீர்மானத்தை, வடக்கு முதலமைச்சர் வழிமொழிந்தார்.

பாலியாற்றிலிருந்து கடலுக்கு சென்று கலக்கும் நீரை குடாநாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தை உறுப்பினர்கள் வரவேற்றனர். எனினும், பா.டெனீஸ்வரன் மாத்திரம் ஆட்சேபணை கிளப்பினார். மன்னார் மக்களின் கருத்தறிந்தே திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

எனினும், கடலுக்கு சென்று கலக்கும் நீரையே குடிநீராக்கும் திட்டமிதுவென அவைத்தலைவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தமிழ்பக்கம் நேற்றே குறிப்பிட்டதை போல, வடக்கு சுகாதார அமைச்சர் ஞா.குணசீலனின் மூக்கு கண்ணாடி விவகாரம் இன்று பூதாகரமாகியிருந்தது. எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, தமிழரசுக்கட்சியின் கே.சயந்தன் போன்றவர்கள் சுகாதார அமைச்சரின்நடவடிக்கையை கண்டித்து உரையாற்றினார்கள்.

தமிழரசுக்கட்சியின் சிவயோகன் மட்டுமே வேறு அபிப்பிராயத்தை குறிப்பிட்டார். “இது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ள பிரச்சனை. அமைச்சர்கள் விவகாரமென எங்கள் கட்சிக்காரர்களை நாங்களே சபையில் மோசமாக பேசுகிறோம். மாகாணசபை உறுப்பினர்களின் கட்சிக்குழு கூட்டம் நடத்தப்பட்டு, அங்கு இவற்றை விவாதிக்க வேண்டும்“ என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here