நடுச்சந்தியில் நின்று போராடிய பொலிஸ்காரரிற்கு விளக்கமறியல்

அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட தெபுவான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மத்துகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதாகக் கூறி தன்னால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுதலை செய்தமைக்கு எதிராக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தெபுவான சந்தியில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தார்.

தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியுடன் தெபுவான சந்தியில் தன்னைத் தானே சுட்டுக் கொள்வதாக அச்சுறுத்தி வந்துள்ளார்.

இதனையடுத்து சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்தின் பின்னர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

மணல் அகழ்வ சம்பந்தமாக கைது செய்யப்பட்டவரிடம் சட்ட ரீதியான அனுமதிப்பத்திரம் இருந்ததால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுவித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீதியில் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதல் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு நேற்று அறிவித்தது.

எனினும், அரசியல்வாதிகளின் பின்னணியில் இயங்கும் சட்டவிரோத மண் கடத்தலையே அவர் தடுத்ததாக சிங்கள சமூக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் விடுதலைப்புலிகளிடம் சிக்கி, அவர்களின் தடுப்பு முகாமில் சில காலம் தடுத்து வைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here