காணி விடுவிப்பை ஆராய ஆளுனர்கள் தலைமையில் குழு!

வடக்கு கிழக்கில் பாதுகாப்பு தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை பொதுமக்களிடமே கையளிக்கும் செயற்றிட்டத்தை துிரிதப்படுத்துவது தொடர்பில் ஆராய, வடக்கு கிழக்கு ஆளுனர்கள் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் நேற்றைய கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது.

நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள், நிலங்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு தரப்பிடம் இருப்பதை சுட்டிக்காட்டினர். வடக்கு கிழக்கில் பல பிரதேசங்களில் மக்கள் போராட்டங்கள் நடந்து வருவதை சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி- “மக்களின் காணிகள் மக்களுக்குரியவை. டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் மக்களின் காணிகள் விடுவிக்கும் செயற்றிட்டம் முடிக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு ஆளுனர்கள் தலைமையில், அமைச்சு அதிகாரிகள், செயலக அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவொன்று இந்த விடயத்தை ஆராயும்“ என தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here