‘பிக் பாஸ்’ பிரபலங்களுடன் சேர்ந்து படம் பார்த்த சிம்பு

‘பிக் பாஸ்’ பிரபலங்களுடன் சேர்ந்து ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தைப் பார்த்துள்ளார் சிம்பு.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. அரவிந்த் சாமி, ஜோதிகா, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எரப்பா, பிரகாஷ் ராஜ் என நிறைய நட்சத்திர நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் 27-ம் தேதி வெளியான இந்தப் படம், பெரும்பாலானவர்களுக்குப் பிடித்திருந்தது. ‘மணி சார் திரும்பக் கிடைத்துவிட்டார்’ என்றெல்லாம் படத்தின் இயக்குநர் மணிரத்னத்தைப் பற்றி நிறைய பேர் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு எழுதினர்.

இந்நிலையில், ‘பிக் பாஸ்’ பிரபலங்கள் சிலருடன் சேர்ந்து ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தைப் பார்த்துள்ளார் சிம்பு. ‘பிக் பாஸ்’ முதல் சீசனில் கலந்துகொண்ட ஹரிஷ் கல்யாண், இரண்டாவது சீசனில் வெற்றிபெற்ற ரித்விகா மற்றும் ஜனனி, மஹத், ஐஸ்வர்யா தத்தா ஆகியோருடன் இணைந்து, நேற்றிரவு படத்தைப் பார்த்துள்ளார் சிம்பு.

சிம்புவுடன் சேர்ந்து ‘பிக் பாஸ்’ பிரபலங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here