குடாநாட்டு நீர்வளத்தை சீரழிக்கும் கரவெட்டி, பருத்தித்துறை உள்ளூராட்சி மன்றங்கள்!

கரவெட்டி முள்ளி மற்றும் கப்பூது பிரதேசங்களில் சுத்திகரிக்கப்படாத மலக்கழிவுகள் கொட்டப்படுவதால், அந்த பகுதி நீரேரி அசுத்தமடையும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. கரவெட்டி பிரதேசசபை மற்றும் பருத்தித்துறை நகரசபை என்பன இந்த பொறுப்பற்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.

இரண்டு உள்ளூராட்சி மன்றங்களிலும் சேகரிக்கப்படும் கழிவுகள் எந்தவித சுகாதார நடமுறைக்கும் உட்படுத்தப்படாமல் இந்த பிரதேசங்களில் கொட்டப்படுகிறது. தொண்டைமானாறு நீரேரியுடன் இணைப்புள்ள அந்த பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் மலக்கழிவுகள் கொட்டப்படுவதால், தொண்டைமானாறு நீரேரி விரைவில் அசுத்தடையும் அபாயத்தை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது.

இதனால் நிலத்தடி நீரும் அசுத்தமடைய ஆரம்பித்துள்ளது.

மழைக்காலங்களில் இந்த கழிவுகள் எந்த தடையுமின்றி நீரேரியில் கலந்து விடுகின்றன. மலக்கழிவுகள் பாதுகாப்பற்ற முறையில் கொட்டப்பட்டு, அது நீரேரியில் கலப்பதால், நீரேரியில் மீன்பிடியில் ஈடுபடும் சிறு வியாபாரிகளின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மேற்படி காரணங்களால், நீரேரியில் பிடிக்கப்படும் மீனை வாங்குவதில் தயக்கம் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

கரவெட்டி பிரதேசசபை, பருத்தித்துறை நகரசபை என்பவற்றின் பொறுப்பற்ற நடவடிக்கையால் குடாநாட்டின் நீர்வளம் பாதிக்கப்படும் அபாயமேற்பட்டுள்ளதுடன், நீரேரியை நம்பி வாழ்க்கை நடத்தும் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here