யாழில் தடுக்கப்பட்ட திரைப்படத்தின் பின்னணியில் இருந்தவர் மஹிந்தவின் ஆலோசகர்!

யாழில் திரையிடுவதிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள Demons in Paradise என்ற திரைப்படம் குறித்த பல அதிர்ச்சி தகவல்களை தமிழ்பக்கம் திரட்டியுள்ளது.

யாழில் இடம்பெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கனடாவில் வசிக்கும் ஜூட் ரட்ணம் என்ற நபர் இயக்கிய Demons in Paradise திரைப்படத்தை திரையிடுவற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. “பொதுமக்கள் கொல்லப்பட்டாலும் சரி, விடுதலைப்புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற மனநிலையில் இருந்தோம்“ என அவர் பிபிசியில் நேர்காணல் வழங்கியிருந்தார்.

Demons in Paradise படம் சில நாடுகளில் ஏற்கனவே திரையிடப்பட்டிருந்தது அப்போதெல்லாம் அது யாரையும் ஈர்க்கவோ, கவனத்தை கோரவோ செய்யவில்லை. இதையடுத்து, பிபிசியில் அப்படியான பரபரப்பு கருத்தை கூறி, திரைப்படத்தை சர்ச்சையானதாக மாற்ற ஜூட் ரட்ணம் முயன்றதாக கூறப்படுகிறது.

ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பை சேர்ந்த ஒருவர் புலிகள், இந்திய ராணுவத்தை கடந்து எப்படி தப்பி பாதுகாப்பாக வெளியேறுகிறார் என்பதே திரைப்படம்.

இந்த படம் உருவாக்கப்படுவதில் மனித உரிமைகளிற்கான பல்கலைகழக ஆசிரியர் சங்கம் என்ற தீவிர புலியெதிர்ப்பு கும்பல் பின்னணியில் இருந்துள்ளது. இந்த கும்பலை சேர்ந்த ராஜன் கூல், படம் திரையிடப்பட வேண்டுமென குத்திமுறிவது கவனிக்கத்தக்கது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு யாழில் நடைபெற்றபோது, அதற்கான முழு ஏற்பாட்டையும் செய்திருந்தவர் மனோரஞ்சன். விடுதலைப்புலிகள் எதிர்ப்பாளராக நீண்டகாலம் அறியப்பட்ட இவர், முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா, மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆலோசகராகவும் செயற்பட்டவர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here