விமான நிலையத்தில் காத்திருந்த கணவன்: முச்சக்கரவண்டியில் இன்னொருவருடன் போன மனைவி!

இலங்கை விமான நிலையத்தில் வைத்து கடத்தல் சம்பவம்….!
கட்டாரிலிருந்து இலங்கை திரும்பிய இளம் குடும்ப பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளார்.

கிரான் கோரகல்லிமடு வாழைச்சேனையில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயாகிய கோபாலகிருஷ்ண பிள்ளை நந்தினி (நந்தா) என்பவரே கடந்த செப்ரெம்பர் 13ம் திகதி காணாமல் போயுள்ளார். அன்றையதினம் காலை 6.30 மணியளவில் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய பெண், முச்சக்கர வண்டியொன்றில் ஏறி சென்ற சிசிரிவி காட்சிகள் பதிவாகியுள்ளன.

கத்தார் நாட்டில் 3 ஆண்டுகள் பணி புரிந்து கடந்த 13ம் திகதிஅன்று நாடு திரும்பியுள்ளார். இவர் இவ்வாறு ஊருக்கு வரும் செய்தியை தொலைபேசி மூலம் 2 தினங்களுக்கு முன் தன் கணவருக்கு அறிவித்திருந்தார். குறித்த தினத்தில் கணவன் விமான நிலையத்திற்கு சென்று காத்து இருந்தார்.

பல மணித்திலாலங்கள் காத்திருந்தும் மனைவி வராததையடுத்து, மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய போது, அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மனைவி நாட்டுக்கு வரவில்லை என்று எண்ணிய கணவன் வீடு திரும்பி உள்ளார்.

பலமுறை மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய போதும் தொடர்பு கொள்ள முடியாததையடுத்து, மனைவி பணி புரிந்த வீட்டிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி விசாரித்துள்ளார். 13ம் திகதியே அவர் இலங்கை சென்றுவிட்டதாக அங்கிருந்து பதில் வந்தது. விமான பயண சீட்டின் பிரதியும் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற கணவனை, விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யுமாறு அனுப்பி வைத்தனர்.

கடந்த மாதம் 15ம் திகதி விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாடு பதிவுசெய்தார். விமான நிலையத்தில் உள்ள சிசிரிவி காட்சிகளை பொலிசார் பரிசோதித்த போது, அவரது மனைவி 3 பைகளுடன் விமான நிலையத்தில் நின்றதும் சிறிது நேரத்தின் பின் ஒரு முச்சக்கர வண்டியில் ஏறிச் சென்றதும் தெரிய வந்தது.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்து, அங்கிருந்து ஒரு புகார் மூலப்பிரதி ஒன்றை கொண்டுவருமாறு விமான நிலைய பொலிசார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து முறைப்பாட்டை பதிவுசெய்துவிட்டு, மனைவிக்காக காத்திருக்கிறார் குறித்த கணவன்.

மனைவி குறித்த தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ,
0762940741 என்ற தனது தொலைபேசி இலக்கத்திற்கோ தகவல் தருமாறு கோரியுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here