2.0 இல் ஐஸ் சிறப்பு தோற்றம்?

0

ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள 2.0 படம் வரும் நவம்பர் மாதம் 29ம் திகதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவானாலும், அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இரண்டாவது பாகத்திற்காக என்ஓசி வழங்காததால் படத்திற்கு எந்திரன் என்றும் பெயர் வைக்க முடியவில்லை.

அதோடு, இந்த 2.0 படத்தின் கதையையும் புதிதாக உருவாக்கியுள்ளதாகவே தெரிகிறது. எந்திரன் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். இரண்டாவது பாகத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். இருப்பினும் எந்திரன் படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராய் 2.0 படத்தில் ஒரு கேமியோ தோற்றத்தில் நடித்திருப்பதாகத் தகவல் பரவி வருகிறது.

இது குறித்து இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை. ஆனால், எந்திரன் படத்துடன் 2.0 படத்தையும் தொடர்புபடுத்த வேண்டும் என்பதற்காக அவருடைய கதாபாத்திரம் பயன்பட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here