மட்டக்களப்பில் அழிந்து வரும் ஆறுகளை காப்பாற்ற ஒரு அருமையான முயற்சி!

ஆற்று தினம் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 3 வது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச ரீதியாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதை முன்னிட்டு, மட்டக்களப்பின் போரதீவுபற்று பிரதேச செயலகபிரிவில் இம்முறை களுவாஞ்சிக்குடி மத்திய நீர்பாசன திணைக்களத்தினால் ஆற்று தினம் நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.

கடந்த 2018/09/03 அன்று காலை 9.30 மணிக்கு போரதீவுபற்று வெல்லாவெளி நவகிரி திட்டப்பிரிவில் நீர்பாசண பொறியியலாளர் எம்.பத்மதாசன் தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் போரதீவுபற்று பிரதேச செயலாளர் இ. ராகுலநாயகி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பொறியலாளர் தனது தலைமை உரையில்- நவகிரி திட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பற்றியும் ஆற்று தினத்தின் முக்கியத்துவம் பற்றியும் உரையாற்றியதுடன்
குறித்த பகுதி விவசாயிகள் உரிய பயனை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதுடன் நமது வளங்களை பேணிப் பாதுகாப்பதில் பொது மக்கள் தொடக்கம் அதிகாரிகள் வரை கவனம் கொள்வது முக்கியமானது எனவும் குறிப்பிட்டார்.

பிரதேச செயலாளரின் உரையில்- “இத்தினமானது ஐக்கிய நாடுகள் சபையினால் 2005 தொடக்கம் அங்கிகரிக்கப்பட்டுள்ளதுடன் இத்தினத்தினை கடந்த வருடம் உலக நாடுகளில் 60 நாடுகளே ஆற்று தினத்தினை அனுஷ்டித்து இருந்தன.

இயல்பு நிலையில் இருக்க வேண்டிய விடயங்களுக்கு ஆபத்து ஏற்படுகின்றதோ அவற்றுக்கெல்லாம் ஒரு தினத்தை ஏற்படுத்தி வழங்குகின்றது. இது உலகில் உள்ள அனைத்து ஆறுகளையும் அதன் இயல்போடு பாதுகாப்பதற்கு உதவுகின்றது. மேலும் ஆற்ரோரங்களில் தற்போது அன்னிய நாட்டு தாவரங்கள் அதிகளவில் பரவல் அடைந்துள்ளன. இதனால் நிலத்தில் உள்ள போசனைகள் உறிஞ்சப்படுவதோடு காட்டுயானைகள் தங்குவதற்கும் வாய்ப்பாக அமைகின்றது. அதனால் இன்றைய தினத்தினை இத்தகைய தேவையற்ற பற்றைகளை ஆற்ரோரங்களில் இருந்து அகற்றுவதற்கு மத்திய நீர் திணைக்களம் முன்வந்திருப்பது வரவேற்கதக்கது. விவசாயிகள் பாதுகாப்பான ஆற்ரோரங்களை பேன வேண்டும்“ என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பிரதேசசபையின் பிரதி தவிசாளர், நீர் திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் திணைக்களத்தின் முகாமைத்துவ குழுவினர் மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

இதன் போது ஆற்றோரங்களை துப்பரவு செய்யும் வேலை திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here