இன்று கோப் குழுவில் முன்னிலையாகும் மட்டு அதிகாரிகள்!

நாடாளுமன்ற கோப் குழு முன்னிலையில் மட்டக்களப்பு மாவட்டச் செயலக அதிகாரிகள் இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2014 ஆண்டு காலப்பகுதியில் கணக்காய்வு ஆணையாளர் நாயக திணைக்களத்தினால் கணக்காய்வு ஐய வினாக்களாக கோரப்பட்டு, உரிய பதில்கள் வழங்கப்படாத விடயங்கள் கோப் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாகவே இன்று விசாரணை இடம்பெறவுள்ளது.

இதில் சில பிரதேச செயலகங்களில் ஏற்பட்ட குறைபாடுகளும் உள்ளடங்குவதுடன், முன்னாள் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் திட்டப்பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன் ஆகியோரின் பொறுப்புகூறலின் கீழ் இடம்பெற்ற, மாவட்டச் செயலகம் அமைந்துள்ள ஒல்லாந்தர் கால கோட்டைக்கு சுற்று கால்வாய் மற்றும் அழகுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பான விசாரணையும் இடம்பெறவுள்ளது. இந்த திட்டத்தில் பல மில்லியன் ரூபா நிதி முறைகேடு இடம் பெற்றிருந்தது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்விசாரணைக்கு அவர்களும் சமூகமும் கொடுக்க வேண்டியிருந்தபோதும்,  அதனை தவிர்த்து தற்போதுள்ள அதிகாரிகள் தாங்களே பதில் வழங்க செல்வதாகவும் தமிழ்பக்கத்திற்கு அறியக் கிடைத்துள்ளது.

பல மோசடிகளை மேற்கொண்ட அதிகாரிகளை தற்போது பதவிகளில் உள்ளவர்கள் ஆதரித்தும், பாதுகாத்தும் செல்வது, ஊழல் மோசடிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் செயற்பாடாக இருக்கப் போகிறதா என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here