9 வயது சிறுமியின் உடல், கை துண்டான நிலையில் சாக்குப் பையில் கண்டெடுப்பு

ஹரியாணா மாநிலம், ரோடக் நகரில் 9 வயது சிறுமியின் உடல் சாக்குப்பையில் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஓடையில் கண்டெடுக்கப்பட்டது. அந்தச் சிறுமியின் ஒரு கை துண்டிக்கப்பட்டது இருந்தது, சிறுமி இறந்து 5 நாட்கள் ஆகியிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காஷ்மீரில் 8 வயது சிறுமி கொல்லப்பட்ட சோகம் மறைவதற்குள் குஜராத்தின் சூரத் நகரில் 86 காயங்களுடன் 11 வயது சிறுமி உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக ஹரியாணா ரோடக்கில் 9 வயது சிறுமியின் உடல் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரோடக் நகர பொலிஸ் அதிகாரி தேவி சிங் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:

”ரோடக் நகரின் புறநகரான தித்தோத் பகுதியில் உள்ள ஒரு ஓடையில் ஒரு சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வருவதாக மக்கள் எங்களுக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரின் அங்கு சென்று அந்தச் சாக்கு மூட்டையைத் தூக்கி, பிரித்தபோது, அதில் 9 வயது மதிக்கத்தக்கச் சிறுமியின் உடல் அதில் இருந்தது.

இந்தச் சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதால், கொல்லப்பட்டு, சாக்குப்பையில் தூக்கி வீசப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மேலும் சிறுமியின் ஒரு கையும் துண்டிக்கப்பட்டுள்ளது. சிறுமி இறந்து குறைந்தபட்சம் 5 நாட்கள் ஆகியிருக்கும்.

இந்தச் சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி இருக்கிறோம். அந்த அறிக்கை வந்தபின் அந்தச் சிறுமிக்கு என்ன நடந்தது என்பது குறித்துக்கூற முடியும்.” இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here