துரோகத்தால் தொலைக்கப்பட்டாய்- பெண் விரிவுரையாளரின் குடும்பத்தினர் ஏந்திய பதாகைகள்!


உயிரிழந்த கிழக்கு பல்கலைகழக பெண் விரிவுரையாளரின் இறுதிச்சடங்குகள் இன்று வவுனியாவில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.

அவரது உடல் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்படும் போது, துரோகத்தால் உயிரிழந்தார் என்ற பொருள்படும் பதாகைகளை குடும்பத்தினர் ஏந்தியிருந்தனர்.

அவரது மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென அங்கிருந்தவர்கள் குரலெழுப்பியிருந்தனர்.

போதநாயகி செந்தூரன் என்ற கிழக்கு பல்கலைகழக விரிவுரையாளரின் மரணத்தையடுத்து, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலைமையில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரும் “துரோகத்தால்“ உயிரிழந்தார் என குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here